Map Banner BGMA BGMA Ticket BGM Shortfilm 2019

'குடும்பத்துக்கே ஒரே ஒரு செல்போன்'... '1500 ரூபா சம்பளம்'.. பபிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.. '1 கோடிப்பு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி  19 வருடங்களாக வெற்றிகரமாக இருந்துவரும் நிலையி், தற்போது ஒரு கோடி ரூபாய் வெற்றி பெற்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆந்திர மாநிலத்தில் உள்ள அமராவதியைச் சேர்ந்த பபிதா.

'குடும்பத்துக்கே ஒரே ஒரு செல்போன்'... '1500 ரூபா சம்பளம்'.. பபிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.. '1 கோடிப்பு'!

சத்துணவு பணியாளராக 1500 ரூபாய் சம்பளத்துக்கு பணிபுரியும் பபிதாவின் உலகமே அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்கள்தான். பபிதா சமைக்கும் கிச்சடிதான் அம்மாணவர்களின் ஃபேவ்ரைட் உணவு என்று மாணவர்கள் சொல்லும் வார்த்தைகளே தனக்கு போதும் என்றும் பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவு செய்த தனக்கு அப்பள்ளி மாணவர்கள்தான் அறிவைப் பகிர்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் நிகழ்வதுபோல், ஏதேனும் ஒரு மாற்றம் நிகழும் என நம்பி குரோர்பதிக்கு விண்ணப்பித்த பபிதா,  இந்த ஜாக்பாட் அடிக்கும் என நினைத்துகூட பார்த்ததில்லை என்றும் இந்த பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய உள்ளதாகவும், தொடர்ந்து சத்துணவு பணிக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தன் வீட்டில் மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருப்பதாகவும், தற்போது வென்றுவிட்டதால், இனிதான் ஆளுக்கொரு செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இத்தனை வருடம் நிகழும் இந்த போட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் சனூஞ் என்கிற இளைஞர் ஒரு கோடியை பரிசாக பெற்றார். இவரை அடுத்து தற்போது பபிதா 1 கோடி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

AMITABHBACHCHAN, KAUNBANEGACROREPATI