கொண்டாட்டத்தின்போது ‘புதுமாப்பிள்ளை’ செய்த ஸ்டண்ட்டால்... திருமணமான ‘இரண்டே’ மாதங்களில் நேர்ந்த ‘துயரம்’... போலீசுக்கு சொல்லாமல் ‘குடும்பத்தினர்’ செய்த காரியம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேசத்தில் டிக்டாக் வீடியோவிற்காக ட்ராக்டரில் ஸ்டண்ட் செய்த புதுமாப்பிள்ளை ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த கபில் என்பவருக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின்போது அவர் டிராக்டர் மீதிருந்து ஸ்டண்ட் செய்து கொண்டிருந்துள்ளார். அதை கீழிருந்து மற்றொரு நபர் போனில் டிக்டாக் வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது வேகமாக இயங்கிய டிராக்டரின் முன் சக்கரங்களை காற்றில் தூக்க முயன்றதில் எதிர்பாராத விதமாக டிராக்டருடைய ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை கபில் இழந்துள்ளார். அதன்பிறகு கண் இமைக்கும் நேரத்தில் டிராக்டர் அவர் மீது கவிழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து கபிலின் குடும்பத்தினர் அவருடைய உடலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “இந்த விவகாரம் தொடர்பாக கபிலின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் கொடுக்கவில்லை” எனக் கூறியுள்ளனர். முசாபர்நகரில் டிக்டாக் வீடியோ எடுக்கும்போது ஒருவர் உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்டாக் வீடியோ எடுக்கும்போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.