'எவ்ளோ' தான் படிச்சாலும்... 'அந்த' விஷயத்துல கொஞ்சம் கூட 'விழிப்புணர்வு' இல்லையாம்... அதிகம் பாதிக்கப்படறது 'இவங்க' தானாம்!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்போதுமான விழிப்புணர்வு இல்லாதால் செக்ஸ் தொடர்பான பாலியல் விஷயங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் என்னும் பல்கலைக்கழகத்தில் செக்ஸ் குறித்த ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் 18 முதல் 39 வயது வரையிலான பெண்கள் கலந்து கொண்டனர். அதில் சரிபாதி இளம் பெண்கள் தயக்கம், குற்ற உணர்ச்சி மற்றும் செக்ஸில் திருப்தியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதிகபட்சமானோர் தன்னுடைய உடல் குறித்தே அதிகம் கவலை கொள்வதாக தெரிவித்து இருக்கின்றனர். பத்திரிகைகள் மற்றும் டிவிக்களில் வரும் மாடல்கள் போல தாங்கள் இல்லை என்று வருத்தம் கொள்கின்றனராம். இதனால் பாலியல் உறவில் போதிய நாட்டமின்மை, பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்படுதல் தடைபடுவது, உச்சநிலையை அடைவதில்லை போன்ற பிரச்சினைகளை இளம்பெண்கள் அதிகளவில் எதிர்கொள்வது தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற நிலைகளை தடுக்க செக்ஸ் குறித்து அனைவரும் வெளிப்படையாக பேச வேண்டும். செக்ஸ் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும். இளம்பெண்களின் செக்ஸ் வாழ்க்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் சூசன் டேவிஸ் கருத்து தெரிவித்து இருக்கிறார்.