‘சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்’.. பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து.. 20 பேர் படுகாயம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபனிமூட்டதால் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை விபத்துக்குள்ளானது. கட்டாக் மாவட்டத்தில் உள்ள சாலாகோன்-நெற்குந்தி ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் சுமார் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Odisha: Seven coaches derailed and several people injured after Lokmanya Tilak Express hits a guard van of a goods train near Salagaon at about 7 am today. pic.twitter.com/5w6xRXOzF7
— ANI (@ANI) January 16, 2020