இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. திருக்குறளுக்கு கதை வடிவில் பொருள் எழுதி, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையரும், ஐபிஎஸ் அதிகாரியுமான திருநாவுக்கரசு  'குரல் அமுது கதை அமுது'  என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

2. மேலும், ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசின் மனைவி லாவண்யா ஷோபனா எழுதிய 'காக்கிசட்டை அப்பா' என்கிற புத்தகமும் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘தனக்கும் காக்கிச் சட்டை அப்பா இருந்தார் என்றும், தானும் ஒரு காக்கிசட்டை அப்பாவாக இருப்பதால், காக்கி சட்டை புத்தகத்தை வெளியிட தனக்கு தகுதி இருப்பதாக எண்ணுகிறேன்’ என்று கூறினார்.

3.கடந்த ஆண்டில் சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.  அதில், மிகுந்த உத்வேகத்துடன் விளையாடிய, மனப்பாங்கை பாராட்டி இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் விராத் கோலி தேர்வாகியுள்ளார்.

4.அதேபோல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5. மூளை அதிர்ச்சி காரணமாக ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6.நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்து வீச்சுகளை கண்டு வியந்தேன் என  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். 

7.பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

8. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் முதன் முறையாக 42 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நடைபெறுவதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

9.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.

10.தமிழக கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர்களுக்கு பாடம் புகட்ட திட்டமிட்டு, களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்றதாக கியூ பிரிவு போலீசாரிடம் கைதான அப்துல் சமீமும், தவுபிக்கும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

RISHABHPANT, DAVIDWARNER, VIRATKOHLI, JASPRIT BUMRAH, ROHIT SHARMA, CHENNAI BOOK FAIR 20202, HUSBANDANDWIFE