'அதுக்காக இப்படியேவா வருவீங்க?'... 'மருத்துவமனைக்கு மகளுடன் வந்த அம்மாவின்'... வைரல் பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை தாராவியில் வசித்துவரும் சுல்தானா என்கிற 32 வயது பெண்மணிக்கு தஹ்சீன் என்கிற 18 வயது மகள் இருக்கிறார். பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் தொடங்கி விதவிதமான பாம்புகள் வரை அடைந்து கிடக்கும், நேச்சர் பார்க் என்கிற இயற்கைப் பூங்காவுக்கு அருகில் இவர்களின் வீடு இருக்கிறது. இது மழைக்காலம் என்பதால், அடைந்து கிடந்த பாம்புகள் அவ்வப்போது ரெய்டுக்குச் செல்வதும் வழக்கம்.

'அதுக்காக இப்படியேவா வருவீங்க?'... 'மருத்துவமனைக்கு மகளுடன் வந்த அம்மாவின்'... வைரல் பதில்!

அப்போது ரெய்டுக்குச் சென்ற பாம்புதான் எதார்த்தமாக, சுல்தானின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. அந்த சமயம் காலை உணவு அருந்திக் கொண்டிருந்த சுல்தானின் மகள் தஹ்சீனின் கைவிரலில் அந்த பாம்பு கடித்துள்ளது. உடனடியாக சுதாரித்த சுல்தான், அங்கிருந்த பாம்பை கண்டுள்ளார். 2 அடி நீளமுள்ள பாம்பை உடனே சென்று தலையும் வாலுமாக பிடித்துள்ளார்.

ஆனால் அது சுல்தானின் கை விரலையும் கடித்துவிட்டது. ஆனால் சுல்தான் தன் மகளை அழைத்துக்கொண்டு ஒரு கையில் பாம்பை பிடித்துக்கொண்டு அருகில் இருந்த சிறிய கிளினிக் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள், பெரிய மருத்துவமனைக்கு செல்லச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பின்னரும், பாம்பை கையில் பிடித்துக் கொண்டே சுல்தான் டாக்ஸி ஏறி, பெரிய மருத்துவமனைக்குச் சென்ற சுல்தானை பார்த்து பதறிய டாக்டர்களும் நோயாளிகளும், ஏன் பாம்பை கையில் பிடித்துக்கொண்டே இங்கு வந்தீர்கள் என கேட்க, ‘எந்த பாம்பு கடித்தது என்று தெரிந்தால்தானே? அதற்குத் தகுந்த மருந்தைத் தந்து வைத்தியம் பண்ண முடியும்? அதனால்தான் பாம்பை கையிலேயே பிடித்துக் கொண்டுவந்தேன்’ என்று சுல்தான் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசியில்தான் தெரிந்தது தாய், மகள் இருவரையும் கடித்தது கட்டுவிரியன் என்று.

SNAKE, MUMBAI, MOTHERANDDAUGHTER