‘டீ விற்பதில் தொடங்கியவர் மோடி!’.. ‘நெகிழ்ந்த ட்ரம்ப்!’.. ‘உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் செய்த காரியம்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நமஸ்தே என்று பேசத் தொடங்கிய ட்ரம்ப், தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த தமது உண்மையான நண்பர் மோடிக்கு நன்றி கூறுவதாகவும், இணையதளம், சமையல் எரிவாயு சேவையை இந்தியாவுக்கு இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு சென்று சேர்த்துள்ளதாகவும் புகழாராம் சூட்டினார்.

‘டீ விற்பதில் தொடங்கியவர் மோடி!’.. ‘நெகிழ்ந்த ட்ரம்ப்!’.. ‘உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் செய்த காரியம்!’

தவிர, இந்த நாளில் இருந்து இந்தியர்கள் அமெரிக்க மக்களின் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளதாகவும், இந்த நாட்டிற்காக எல்லையற்ற சத்தியத்துடன் உழைக்கும் மோடி, இளம் வயதில் டீ விற்றவர் என்று கூறி நெகிழ்ந்தார் ட்ரம்ப். உடனே உணர்ச்சியால் எழுந்து வந்த பிரதமர் மோடி

ட்ரம்ப்புடன் கைகுலுக்கி நெகிழ்ந்தார்.  

பின்னர் நட்புடன் தங்களிடம் வந்தால் வரவேற்போம் என்றும், பயங்கரவாதிகளுக்கு தங்களது கதவுகள் மூடப்பட்டிருக்கும் என்றும் பேசிய ட்ரம்ப், பிரதமர் மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, பக்திக்கும் கடின உழைப்புக்கும் வாழும் உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சின், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களால் இந்தியர்கள் உற்சாகமடைவதாக தெரிவித்தார்.

NARENDRAMODI, DONALD TRUMP