VIDEO: 'நாங்க ஏன் இந்தியா வந்திருக்கோம்னு தெரியுமா?'... அகமதாபாத்தை அதிர வைத்த 'ட்ரம்ப்' பேச்சு!... ஆரவாரம் செய்த மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தான் இந்தியா வந்ததற்கான நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று காலை இந்தியா வந்தடைந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தரையிறங்கிய அதிபர் ட்ரம்ப், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டார். அதன் பின், அகமதாபாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், "நானும் எனது மனைவியும் உலகத்தைச் சுற்றி 8000 மைல்கள் கடந்து இந்தியாவிற்கு வந்தது, ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு தகவலைத் தெரிவிக்கத் தான். அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது; அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது; அமெரிக்கர்கள் எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள்" என்றார்.
प्रथम महिला और मैं इस देश के हर नागरिक को एक सन्देश देने के लिए दुनिया का 8000 मील का चक्कर लगा कर यहां आये हैं l अमेरिका भारत को प्रेम करता है - अमेरिका भारत का सम्मान करता है - और
अमरीका के लोग हमेशा भारत के लोगों के सच्चे और निष्ठावान दोस्त रहेंगे l https://t.co/1yOmQOEnXE
— Donald J. Trump (@realDonaldTrump) February 24, 2020