'கொட்டும்' மழையிலும் 'குடையுடன்' டாஸ்மாக் வாசலில், வரிசையில் நிற்கும் 'மதுப் பிரியர்கள்!'.. 'வைரல்' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 3-ஆம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ஆங்காங்கே மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன.

'கொட்டும்' மழையிலும் 'குடையுடன்' டாஸ்மாக் வாசலில், வரிசையில் நிற்கும் 'மதுப் பிரியர்கள்!'.. 'வைரல்' சம்பவம்!

இதனையடுத்து, “கடை எப்ப சார் திறக்கும்?” என்பதுபோல் மதுப் பிரியர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்த 3-ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் போது கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், ஊரடங்குக்கான கட்டுப்பாடுகளும் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டன. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 40 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

டெல்லி மட்டுமன்றி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் கூட மது கடைகள் திறக்கப்பட்டதும் ஆண்கள், பெண்கள் என பாரபட்சமில்லாமல் மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் குவியத்தொடங்கினர். 

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் உள்ள சாலையில் உள்ள மதுக்கடைகளில் சமூக இடைவெளி மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வரையறுக்கப்பட்டிருந்த வட்டத்திற்குள் பொறுப்பாக நின்று மதுப்பிரியர்கள் ஆலங்கட்டி மழையையும் பொருட்படுத்தாமல் குடையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.