‘ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் ’.. ‘குடல் வெளியே தெரியுமளவுக்கு பலத்த காயம்’.. உயிர் பிழைத்த அதிசயம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் பலத்த காயத்துடன் உதவிக்கு யாரும் இல்லாமல் பல கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுனில் சௌதான் என்பவர் தனது நண்பர்களுடன் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்துக்கு வேலை விஷயமாக ரயிலில் சென்றுள்ளனர். அனைவரும் ரயில் கதவுக்கு அருகே அமர்ந்து பயணித்துள்ளனர். அப்போது வாராங்கல் மாவட்டத்தில் உள்ள உப்பல் என்ற ரயில் நிலையம் அருகே சுனில் சௌதான் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இரவு நேரம் என்பதாலும், ரயில் சத்தத்தாலும் சுனில் விழுந்தது அவரது நண்பர்களுக்கு யாருக்கும் தெரியவில்லை. ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் தண்டவாளத்துக்கு அருகே இருந்த கம்பி ஒன்று சுனிலின் வயிற்றில் குத்தி குடல் தெரியுமளவுக்கு கிழித்துள்ளது. இதனால் வலியைத் தாங்கிக் கொண்டு உடனே தனது சட்டையை கழற்றி வயிற்றை சுற்றிக் கட்டியுள்ளார்.
அருகில் உதவிக்கு யாரும் இல்லாததால் வலியுடன் தண்டவாளத்திலேயே சுமார் 9 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார். பின்னர் ஹசன்பர்தி என்னும் ரயில் நிலையம் சென்றதும் அங்கிருந்த ஸ்டேசன் மாஸ்டரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சுனிலை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் சுனிலின் கை, கால், தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்குபின் சுயநினைவு திரும்பியதை அடுத்து அவரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.