'மரம் கூட உயிரை காப்பாத்தும்'... 'வந்த வேகத்துல 'யூ டர்ன்' போட்ட பஸ்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேகமாக வந்த பேருந்து ஒன்று காரின் மீது மோதும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கேதனுர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போடுவதற்காக கார் ஒன்று சாலையிலிருந்து திரும்புகிறது. அப்போது காரின் பின்பக்கம் வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதுகிறது. இதில் யூ டர்ன் போட்ட பேருந்து காரின் மீது கவிழும் நிலைக்கு சென்றது. அப்போது அந்த பெட்ரோல் பங்கில் இருந்த மரத்தின் மீது பேருந்தின் ஒரு பக்கம் சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில் பெட்ரோல் பங்கில் அந்த மரம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் பேருந்து அந்த காரின் மீது கவிழ்ந்து பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும். இந்த காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Shocking accident caught on camera near Thiruppur.
— Pramod Madhav (@madhavpramod1) July 23, 2019
Speeding private bus couldn’t stop on time, pushing itself and a car into a nearby fuel station.
No lifeloss, thanks to a tree that stood as a protector saving the bus from toppling over. pic.twitter.com/SsfU7dS6e8