'யார் இந்த நாகராஜ்'...'படிச்சது 8ம் கிளாஸ் தான்'...மலைக்க வைக்கும் பல்லாயிரம் கோடி சொத்து!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டிலேயே பணக்கார வேட்பாளர் என்ற பெயர் பெற்ற எம்.எல்.ஏ எம்.டி.பி. நாகராஜின் சொத்து மதிப்பு 18 மாதங்களில் 185 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் முன்னாள் அதிருப்தி எம்.எல்.ஏ'வான எம்.பி.டி.நாகராஜ், 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவர் கடந்த கர்நாடகா ஆட்சியில் அமைச்சராக இருந்த நிலையில், மஜத - காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை விலக்கியதால் இவர் உள்பட 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடைத்தேர்தலில் போட்டியிடவும் அனுமதி வழங்கியது. இதையயடுத்து பாஜக சார்பில் நாகராஜ் வேட்பாளராக களமிறங்க இருக்கிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு 1200 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். இது கடந்த 2018ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட அதிகம்.
இவர் காங்கிரஸ் - ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கான ஆதரவை கடந்த ஆகஸ்ட் மாதம் வாபஸ் பெற்றார். அந்த சமயத்தில் அவருக்கு இருக்கும் 53 வங்கி கணக்குகளில் 48 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. அதோடு கடந்த ஆண்டு தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட தற்போது 185 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.