'சாலையில் கிடந்த ஐடி இளம்பெண்ணை'... 'காப்பாற்றிய பெண் காவலர்களுக்கு'... 'நிகழ்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடிபோதையில் சாலையில் கிடந்த ஐடி பெண் ஊழியரை, பாதுகாப்புக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தபோது, அங்குள்ள பெண் காவலர்களை தாக்கி ஓட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜஹிரனங் சாலையில், சனிக்கிழமை அன்று இரவு, குடிபோதையில் இளம்பெண் ஒருவர் அரை மயக்கத்தில் விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து, பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய பெண் போலீசார், அந்தப் பெண்ணை பாதுகாப்புக்காக காவல் நிலையத்திற்கு தூக்கி வந்து படுக்க வைத்திருந்தனர். பின்னர், போதை தெளிந்த பின் எழுந்த அந்தப் பெண், காவல்நிலையத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்துபோய், என்னை எதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
பின்னர், அங்கு பணியில் இருந்த பெண் எஸ்ஐ, பெண் கான்ஸ்டபிள்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி பிடிக்க பெண் காவலர்கள் முயன்றனர். அப்போது பெண் எஸ்ஐ கழுத்தை கடித்து பதம் பார்த்ததுடன், இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் கைகளையும் கடித்தார். பின்னர், அவர்களின் உடைகளையும் பிடித்து இழுக்க ஆரம்பித்து தாக்க முயன்றுள்ளார்.
ஒருவழியாக, அவரைப் பிடித்த பெண்காவலர்கள், அவரிடம் நடத்திய விசாரணையில், அங்குள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், நாகலாந்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காவலர்களை தாக்கியதற்காக அந்த இளம்பெண் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. பின்னர், அந்த இளம்பெண்ணின் காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் வீடியோ வெளியாகி உள்ளது.
போதையில் சாலையில் கிடந்த ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்.
பாதுகாப்புக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பெண் எஸ்ஐ, கான்ஸ்டபிள்கள் ஆசிரியரை தாக்கி தப்பி ஓட முயற்சி pic.twitter.com/F9g0jRPhir
— Lingam S Arunachalam (@as_lingam) November 17, 2019