‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் கணவரைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மனைவியும், அவருடைய காதலரும் விஷம் அருந்திய நிலையில் மும்பை விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ரிஜோஷ் - லிஜி என்ற தம்பதி வேலை செய்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி தனது கணவரைக் காணவில்லை என லிஜி போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தனது கணவர் கோழிக்கோடு பகுதியில் இருந்து ஃபோன் செய்ததாக லிஜி கூறியுள்ளார். போலீஸார் கால் வந்த அந்த எண்ணை ட்ரேஸ் செய்தபோது அது ரிஜோஷ் - லிஜி வேலை செய்து வந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் வாசிமின் நண்பருடையது எனத் தெரியவந்துள்ளது. பின்னர் அவரிடம் விசாரித்ததில் வாசிம் சொன்னதாலேயே அவர் அப்படி செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதும் லிஜி தனது 2 வயது குழந்தை மற்றும் வாசிமுடன் தலைமறைவாகி உள்ளார். இதனால் லிஜிக்கும், வாசிமுக்கும் இடையே தகாத உறவு இருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் வாசிமின் பண்ணை வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது பண்ணை வீட்டின் பின்புறம் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ரிஜோஷின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்ததில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாசிம் வாட்ஸ்அப் வீடியோ மூலம் போலீஸாருக்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இந்தக் கொலையை நான் மட்டுமே தனியாகச் செய்தேன். இதில் யாருக்கும் தொடர்பு இல்லை. அதனால் என் நண்பர்கள், சகோதரர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை மும்பையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வாசிமும், லிஜியும் நீண்ட நேரமாகியும் அறைக் கதவைத் திறக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தபோது வாசிம், லிஜி, அவருடைய 2 வயது குழந்தை மூவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். பின்னர் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. அங்கு லிஜியின் 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில், லிஜி, வாசிம் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மும்பை போலீஸார் அளித்த தகவலின் அடிப்படையில் கேரள தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.

KERALA, IDUKKI, HUSBAND, WIFE, LOVER, AFFAIR, BABY, MURDER, DEAD, SUICIDE, MUMBAI