‘2 ரூபாய்க்கு நடந்த சண்டை’.. ‘கம்பியால் அடித்த நபர்’.. சுருண்டு விழுந்த இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு ரூபாய்க்கு நடந்த வாக்குவாதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள வலசபகலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுவர்னராஜு (24). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று சம்பா என்பவரது சைக்கிள் கடைக்கு தனது சைக்கிள் டயருக்கு காற்று நிரப்ப சென்றுள்ளார். காற்று நிரப்பிய பின் அதற்கான ரூ.2 சுவர்னராஜா தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடை உரிமையாளர் சம்பா மற்றும் சுவர்னராஜு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுவர்னராஜு, கடை உரிமையாளர் சம்பாவை தாக்கியுள்ளார். அப்போது கடையில் இருந்த சம்பாவின் நண்பர் அப்பா ராவ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் சுவர்னராஜுவை தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் அங்கே சுருண்டு விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுவர்னராஜு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கடை உரிமையாளர் சம்பா மற்றும் அவரது நண்பர் அப்பா ராவ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இரண்டு ரூபாய்க்கு நடந்த வாக்குவாதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.