'இட்லி வியாபாரி சட்னி தயாரிக்க செய்யும் காரியம்'.. பரபரப்பான வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இட்லி உணவு தயாரிப்பதற்கு கழிவறையில் இருந்து தண்ணீர் எடுக்கும் நபரின் பதைக்க வைக்கும் செயல், இணையத்தில் வீடியோவாக பரவி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

'இட்லி வியாபாரி சட்னி தயாரிக்க செய்யும் காரியம்'.. பரபரப்பான வைரல் வீடியோ!

சாலையோர உணவுக்கடைகளில் பலரும், சுத்தம் உள்ளிட்டவற்றைப் பார்க்காமல் ஒரு நம்பிக்கையின் பேரில், குறைவான விலைக்காக சாப்பிடுவதுண்டு. அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், எண்ணெய் உள்ளிட்டவற்றின் தரம்தான் விலைக்கேற்றவாறு குறைவாக இருக்குமே தவிர, முற்றும் அந்த உணவுகள் கேடானவை அல்ல என்கிற நம்பிக்கை,வாடிக்கையாளர்க்கும், ஓரளவுக்காவது சுகாதாரமான உணவைத் தரவேண்டும் என்கிற அக்கறை வியாபாரிகளுக்கும் இருக்கும்.

ஆனால் மும்பையின் பொரிவாலி  ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவத்தில், இட்லி வியாபாரி ஒருவர், தான் தயாரிக்கும் இட்லிக்கான சட்னியை அரைப்பதற்காக, அங்கு இயங்கும் கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்துகிறார்.

பின்னர் அந்த சட்னியை தம்மிடம் சாப்பிட வருபவர்களுக்கு இட்லி வழங்கும்போது, இட்லியுடன் சேர்த்து மனச்சாட்சி இல்லாமல் வழங்குகிறார். இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த 45 நொடி வீடியோவை பார்த்த பின், உணவுப்பாதுகாப்புத்துறை இவ்விஷயத்தை விசாரிக்கத் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இதுபற்றி பேசிய உணவுப்பாதுகாப்புத்துறை இந்த வீடியோ தங்களது கவனத்துக்கு கிடைக்கப்பெற்றதாகவும், அதிர்ச்சி தரும் இந்த வீடியோவை பார்த்தபின், அந்த இட்லிக்கடை வியாபாரியை கண்டுபிடிக்கவிருப்பதாகவும், இதுபோன்ற சுகாதாரமற்ற உணவைத் தந்து வாடிக்கையாளரின் உடல்நலத்தில் அக்கறை இல்லாத இவரின், உரிமத்தை ரத்து செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOOD, IDLI, HEALTH