மற்றுமொரு பதைபதைப்பு சம்பவம்.. குரூரமாகத் தாக்கப்பட்ட இளைஞர்கள்.. காரணம் இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேட்டரிகளைத் திருடியதற்காக இரு இளைஞர்கள் குரூரமாகத் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வலம் வந்து காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
நொய்டாவில் கடந்த வியாழன் அன்று ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து சிலர் பேட்டரிகளைத் திருடும் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக அந்த பகுதியின் மங்கள் பஜார் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தவர்கள் ஆட்டோவின் பேட்டரிகளைத் திருடிக்கொண்டிருந்துள்ளனர்.
பின்னர் ஆட்டோ டிரைவர் ஒருவர், அப்பகுதியில் குடித்துவிட்டு ஆட்டோவில் அமர்ந்திருந்த 2 இளைஞர்களை அடையாளம் விசாரித்துள்ளார். ஆனால் அவர்களின் பதில்கள் ஏற்புடையதாக இல்லாததால், அவர்கள் மேல் சந்தேகப்பட்டதோடு, அதன் பிறகு இருவரின் டி-ஷர்ட்களும் கழற்றப்பட்டும் இருவரும் ஒன்றாக ஒரு கயிற்றில் கட்டுப்பட்டும் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஒரு தெருமுனையில் அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட இந்த இருவரும் கதறும் வீடியோ இணையத்தில் பரவி வந்ததை அடுத்து, இந்த வீடியோ காவல்துறையின் கவனத்துக்குச் சென்றுள்ளது.
இதுபற்றி பேசியுள்ள நொய்டாவின் 20வது செக்டார் காவல்துறையினர், பேட்டரிகளைத் திருடியதாகக் கூறி இந்த 2 பேரையும் சரமாரியாகத் தாக்கிய அந்த கும்பலின் மீது செக்ஷன் 323 மற்றும் 343 ஆகிய பிரிவுகளின் கீழ், முறையே குரூரமாக துன்புறுத்துதல், தவறான முறையில் சகமனிதரை தம் கட்டுப்பாட்டில் வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் ஆகிய வழக்குகள் பதியப்பட்டு, தேடப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
ASP Gautam Buddha Nagar, Dr. Kaustubh: A video has gone viral in which two men can be seen tied to a poll and being beaten up by some people. People who had tied the men have been identified and a case has been registered. Further investigation underway. pic.twitter.com/AXW57gO4cT
— ANI UP (@ANINewsUP) June 1, 2019