“2 நாளைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொண்டு கொரோனா பரிசோதனை பண்ண வேண்டாம்!” - ICMR-ன் அதிரடி அறிவுறுத்தல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய மாநில அரசுகளிடம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெகுவேகமாக கண்டறிவதற்கான உபகரணமாக சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்தி பரிசோதனை செய்தபோது ராஜஸ்தான் , மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் முழுமையான முடிவுகள் கிடைக்கப்பெறாததாக கூறப்படுகிறது. இதனால் குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
அதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்து அறிவிப்புகள் வழங்கும் வரை 2 நாளைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை சோதனை செய்ய வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.