'கஷ்டமா இருந்துச்சு.. நாம என்ன பண்ண முடியும்.. ஏன்னா நாங்கலாம்'... உருகிய ஸொமாட்டோ ஊழியர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அண்மையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமித் சுக்லா, ஷெர்வான் மாதம் என்பதால், வெஜிட்டேரியன் அல்லாத ஒரு டெலிவரி பாய், தனக்கு உணவு எடுத்துவருவதை தான் விரும்பவில்லை என ஸொமாட்டோவின் ஆர்டரை கேன்சல் செய்த சம்பவம் இந்தியாவில் சலனத்தை ஏற்படுத்தியது.

'கஷ்டமா இருந்துச்சு.. நாம என்ன பண்ண முடியும்.. ஏன்னா நாங்கலாம்'... உருகிய ஸொமாட்டோ ஊழியர்!

இதற்கு ஸொமாட்டோ அளித்த பதிலான, ‘உணவுக்கு மதமில்லை. எங்கள் உணவு டெலிவரி ரைடர்களிடையே மத பாகுபாடும் இல்லை’ என்கிற பதில் வைராலனது. அதோடு அமித் சுக்லாவோ, தனக்கு உணவை கேன்சல் செய்யவும், மத ரீதியான கட்டமைப்பை கடைபிடிக்கவும் உரிமை இருப்பதாகவும் கூறினார்.

எனினும் ப.சிதம்பரம், ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஸொமாட்டோவை பாராட்டினர். ப.சிதம்பரம், இதுவரை ஸொமாட்டோவில் ஆர்டர் செய்ததில்லை என்றும், இனிமேல் ஆர்டர் செய்ய உள்ளதாகவும் ட்வீட் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அமித் சுக்லாவுக்கு காவல்துறை தரப்பில் இருந்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால், இத்தனைக்கும் நடுவில், உணவு டெலிவரி செய்யப் போன அந்த இந்து-அல்லாத ரைடர் ஃபயாஸ் என்ன நினைத்திருப்பார்? அவர் மனம் என்னவாகியிருக்கும்? விசாரித்ததில், அவர் அமித் சுக்லாவின் ஆர்டரை கொண்டு போய் சேர்க்கும்போது, அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது அக்கறையுடன் அமித் சுக்லாவின் அட்ரஸை கேட்கத் தொடங்கினார் ஃபயாஸ்.

ஆனால் அதற்குள் அமித் சுக்லா, தான் உணவை கேன்சல் செய்துவிட்டதாகவும், அதற்கான காரணம், உணவை ஃபயாஸ் கொண்டுவருவதுதான் என்றும் அமித் கூறியவுடன், மனம் உடைந்த ஃபயாஸ், திரும்பிச் சென்றுவிட்டார். இதுபற்றி ஊடகங்கள் கேட்டபோது, அமித் அப்படிச் சொன்னதும் மனதளவில் காயப்பட்டதாகவும், ஆனால் ‘நாம் என்ன செய்ய முடியும் அதற்கு? நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகள்’ என்று தெரிவித்துள்ளார்.

MADHYAPRADESH, ZOMATO, ONLINEFOOD, DELIVERYBOY, AMITSUKLA