'கல்யாணத்துல எவ்வளவு செஞ்சோம்'... 'என் பொண்ணுக்கு இப்படி ஒரு அநியாயமா'... நெஞ்சை உலுக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் நகை கடை உரிமையாளர் மனைவி தீக்குளித்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கல்யாணத்துல எவ்வளவு செஞ்சோம்'... 'என் பொண்ணுக்கு இப்படி ஒரு அநியாயமா'... நெஞ்சை உலுக்கும் சோகம்!

திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அருண். நகை கடை அதிபரான இவருக்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, மைதிலி என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது மைதிலிக்கு 50 பவுன் நகைகள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். இருப்பினும் மேலும்  வரதட்சணை கேட்டு மைதிலியின் கணவர் அருண், மாமனார் இளங்கோ, மாமியார் சுபா ஆகியோர் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மைதிலி, கடந்த மாதம் ஜூலை 26 ஆம் தேதி அதிகாலை, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

மைதிலியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மைதிலியிடம் விசாரணை நடத்தினர். அப்போது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் மைதிலி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து கணவர் அருண், மாமனார் இளங்கோ ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் 'திருமணத்திற்காக நாங்கள் எவ்வளவு செய்தோம், இப்படி வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி எங்க வீட்டு பெண்ணை தற்கொலை பண்ண வச்சிட்டீங்களே' என அவரது குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.

SUICIDEATTEMPT, MURDER, DOWRY, TIRUVARUR