'சொந்த ஊருக்கு போக முடியாமல் தவிப்பு'...'சிறப்பு ரயிலில் எப்படி பயணிப்பது'?... புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த ரயில்வே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கின் காரணமாகத் தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றும் சுற்றுலா வந்தவர்கள் எனப் பலரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இதையடுத்து அவ்வாறு சிக்கித் தவிப்பவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக ரயில்வே அமைச்சகம் கடந்த 1-ந் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதற்காக ஆகும் செலவை அந்தத்தந்த மாநிலங்கள் ஏற்க வேண்டும் என ரயில்வே அறிவித்திருந்தது.

'சொந்த ஊருக்கு போக முடியாமல் தவிப்பு'...'சிறப்பு ரயிலில் எப்படி பயணிப்பது'?... புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த ரயில்வே!

இந்நிலையில் சிறப்பு ரயில்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்து உள்ளது. அதில், ' சிறப்பு ரயில்கள் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் அந்த ரயில்கள் எந்த இடையில் எங்கும் நிற்காமல் செல்லும். ஒரு ரயிலில் சுமார் 1,200 பயணிகள் வரை பயணிக்க முடியும். இதற்கான டிக்கெட்களை ரயில்வே அச்சடித்து அந்தந்த மாநிலங்களிடம் வழங்கும்.

மாநில அரசு அந்த டிக்கெட்டுகளை பயணம் செய்பவர்களிடம் கொடுத்து டிக்கெட் கட்டணத்தை வசூலித்து ரெயில்வேயிடம் வழங்க வேண்டும். பயணத்திற்கு முன்பு, பயணம் செய்யும் நபர் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே அனுமதிக்கப்படுவார். மேலும்  பயண நேரம் 12 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தால் ரயில்வே சார்பில் பயணிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும், போன்ற நெறிமுறைகள் ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கிடையே ரயில்வே வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் சிறப்பு ரயில்கள் இயக்குவதை நிறுத்தி வைக்கும் உரிமை ரயில்வே நிர்வாகத்துக்கு உண்டு எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.