'ஐடி பார்க்'ல வேலை'...'முதல் நாளே 'ஐடி பெண்' ஊழியருக்கு நேர்ந்த துயரம்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே, ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் நிறுவனத்தின் மாடியில் இருந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த டெனிதா ஜீலியஸ். 24 வயதான இவருக்கு, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பகுதியில் உள்ள தனியார் ஐடி பார்க்கில் வேலை கிடைத்தது. இதையடுத்து நேற்று அலுவலகத்திற்கு வந்த அவர் தனது பணியினை தொடங்கினார். இதனிடையே நேற்று இரவு பணி முடியும் நேரத்தில், நிறுவனத்தின் 8 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெனிதா ஜீலியஸ் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். டெனிதா வேலைக்கு சேர்ந்து முதல் நாளே இந்த துயரம் நடந்ததால், அவர் குறித்து அவருடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு எதுவும் தெரியவில்லை.
இதனியிடயே டெனிதா மரணம் குறித்து திருச்சியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டெனிதா தவறி விழுந்தாரா, அல்லது தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டனரா என்ற பல்வேறு கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்கள். நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் டெனிதாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் பணியில் சேர்ந்த முதல் நாளில், இளம் பெண் ஒருவர் நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.