‘ஆடுகளை கைதுசெய்து’... ‘அபராதம் விதித்து, எச்சரிக்கை’... ‘அதிர வைத்த காரணம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு ஆடுகளை கைது செய்து, காவல்நிலையத்தில் இரவு முழுவதும் கட்டி வைத்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹுசராபாத் அருகே உள்ள கரிம்நகர் மாவட்டத்தில், மரம் வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, ஹரிதா ஹரம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் கீழ் பெரிய இடங்கள் மற்றும் சாலைகளில் மரக்கன்றுகளை, Save The Trees என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் வளர்த்து வருகின்றனர். சுமார் 900-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளில், 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இந்த 2 ஆடுகள் மேய்ந்து விட்டது என்பதே குற்றச்சாட்டு.
முழுவதுமாக மரக்கன்றுகளை வளரவிடாமல், திரும்பத், திரும்ப ஆடுகள் மரக்கன்றுகளை மேய்வதால், அவற்றை பிடித்து வந்து காவல் நிலையத்தில். தனார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர். மரக்கன்றுகளை தின்றதற்கு தண்டனையாக, இரவு முழுவதும் காவல் நிலைய வாசலிலேயே, இரண்டு ஆடுகளும் கட்டி வைக்கப்பட்டன. மரக்கன்றுகளை தின்றதற்காக ஆடுகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதன் பின்னர், கும்மரிவாட பகுதியைச் சேர்ந்த ஆடுகளின் உரிமையாளர் டோர்னகொண்ட ராஜய்யாவை வரவழைத்து, ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு செல்லும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஊருக்கு வெளியே ஆடுகளை மேய்ச்சலில் விட வேண்டும் அல்லது வீட்டிலேயே வைத்து வளர்க்க வேண்டும் என்றும், ஆடுகளை கண்டபடி அவிழ்த்து விடக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பினர்.