‘ஆசையா வளத்தது வெட்டாதீங்க..’ வைரலான வீடியோவால்.. ‘சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாதான் ஆசையாக வளர்த்த மரங்களை வெட்டியதைப் பார்த்து சிறுமி ஒருவர் தேம்பி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலம் காக்சிங் நகரைச் சேர்ந்த இளங்பம் பிரேம்குமார் என்பவரது மகள் இளங்பம் வேலன்டினா தேவி (10). இவர் தனது வீட்டருகே இரண்டு குல்முகர் மரக்கன்றுகளை ஆசையாக நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார். 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்திருந்த அந்த மரங்கள் கடந்த சனிக்கிழமை சாலை அகலப்படுத்தும் பணியில் வெட்டப்பட்டுள்ளது. அப்போது மரங்களை வெட்டவிடாமல் தடுத்து சிறுமி கதறி அழுதுள்ளார். பின்னர் மரங்கள் வெட்டப்பட்ட பிறகும் அதைத் தாங்க முடியாமல் சிறுமி தேம்பித் தேம்பி அழுதுள்ளார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உடனடியாக சிறுமி வேலன்டினாவை சந்தித்து அவருக்கு 20 மரங்களைக் கொடுத்து அதை நடுவதற்கான இடத்தையும் அளியுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமி வேலன்டினாவை மாநிலத்தின் பசுமை மணிப்பூர் இயக்க தூதராகவும் அவர் நியமித்துள்ளார். பசுமையை ஊக்குவிக்கும் மணிப்பூர் அரசின் அனைத்து விளம்பரங்கள், பிரச்சாரங்களிலும் இனி வேலண்டினாவின் புகைப்படம்தான் இடம்பெறும் எனவும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Elangbam Valentina, 9 years old crying over cutting down her two Gulmohar trees planted by herself in the road widening of her village road at Hiyanglam Village, Kakching District of Manipur. Now she pledges to plant 20 more such trees.. #plantloverhttps://t.co/nvPWVfxKd5
— Santosh S K (@Inaoba) August 4, 2019
She cry for felling down of 2 trees which she planted when she was only in class 1.We rushed at her place and tried to console her providing more saplings. Now She will be the State government,s “Green Ambassador”for C M,s Green Manipur Mission “ let’s follow her, save nature pic.twitter.com/kGuFsDCPYf
— N.Biren Singh (@NBirenSingh) August 7, 2019