'அடப்பாவிகளா?.. நீங்கல்லாம் எக்ஸாம்க்கா வந்துருக்கீங்க'.. கடுப்பான கண்காணிப்பாளர்.. அப்படி என்ன நடந்துச்சு?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை பவாய் ஐ.டி. பார்க்கில் நிகழ்ந்த மத்திய அரசு பணிக்கான ஆன்லைன் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடு இந்தியாவை அதிரவைத்துள்ளது.

'அடப்பாவிகளா?.. நீங்கல்லாம் எக்ஸாம்க்கா வந்துருக்கீங்க'.. கடுப்பான கண்காணிப்பாளர்.. அப்படி என்ன நடந்துச்சு?

இந்தத் தேர்வை எழுதியவர்களில், பிரதிப்குமார் (26), ரமணிவாஸ் (20), ஆமன் ஹரிகேஷ் (23), தினேஷ் தல்பீர் (25), மோகித் பிஜேந்தர் (20), குஷ்குமார் (24), நவின் (19), சுமித் குல்தீப் (21), ராகேஷ் (23), சவுரப் சுபாஷ் (21), நவின்ரந்தீர் சிங் (21) உள்ளிட்ட 11 பேர் தத்தம் காதுகளில் மைக்ரோ ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு தேர்வினை எழுதியுள்ளனர்.

சுமார் 250 பேர் எழுதிய இந்தத் தேர்வில், தேர்வறைக் கண்காணிப்பாளராக இருந்த கேத்தன் சவான், மைக்ரோ ஹெட்போனுடன் தேர்வில் அமர்ந்துகொண்டிருந்த மேற்கண்ட 11 பேரையும் பிடித்ததோடு, பவாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். திரைப்படங்களில் வருவது போல, மத்திய அரசு பணிக்கான ஆன்லைன் தேர்வில் இப்படியான முறைகேடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: இந்தச் செய்தியின் இணைப்பில் உள்ள படம் சித்தரிப்புப் படம்.

EXAM, MUMBAI