‘அதுக்கு அப்பறம் அவர்கிட்ட பேசினீங்களா?’.. ‘ரவி சாஸ்திரி குறித்த கேள்விக்கு தாதா கங்குலியின் வைரல் பதில்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் நியமித்திருக்கக் கூடாது என பிசிசிஐ தலைவராக பதவியேற்க உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலியிடம் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள கங்குலி, “இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை மீண்டும் தேர்வு செய்திருக்கக் கூடாது. அதேசமயம் அவர் பாரபட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் நான் நினைக்கவில்லை. முரண்பாடுகள் இருந்தபோதே மீண்டும் அவர் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் ரவி சாஸ்திரியுடம் பேசினீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள கங்குலி, “ஏன் இப்போது அவர் என்ன செய்துள்ளார்?” என சிரித்துக்கொண்டே கேட்டுள்ளார். கங்குலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் நேருக்கு நேர் எந்தவித பிரச்சனையும் இல்லையென்றாலும், இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இருந்த போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது சர்ச்சைக்குள்ளானது இங்கு குறிப்பிடத்தக்கது.