'அதிபர் ட்ரம்புக்கான பாதுகாப்பு குழுவில்'... '5 லாங்கூர் இன குரங்குகள்'... எதற்காக தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட வரும் ட்ரம்பின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு படை குழுவில் 5 லாங்கூர் இன குரங்களும் சேர்க்கப்பட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறைப் பயணமாக வருகை தருகிறார். இங்கு அவர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து இன்று சுற்றி பார்க்கவுள்ளார். இதையொட்டி ஆக்ராவில் தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 5 நீண்டவால் கொண்ட லாங்கூர் இன குரங்குகளும் இடம் பெற்றுள்ளன.
ஏனெனில் ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளதால், ட்ரம்ப் வருகையின்போது குரங்குகளால் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், ட்ரம்ப் அணிவகுப்பு வாகனம் செல்லும்போது குரங்குகள் வந்தால், அதை விரட்டியடிக்கவும், அச்சுறுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்ட 5 லாங்கூர் இன குரங்குகள் பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.