'Happy Married Life தாத்தா'... 'அப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்'... ஆச்சரிய காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

'Happy Married Life தாத்தா'... 'அப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்'... ஆச்சரிய காரணம்!

ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பலரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து தம்பதியராக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த  ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர், 30 வருடங்களுக்கும் மேலாகத் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகனும் உள்ளார்.

மகன் ஜித்தீசும் திருமணம் செய்துகொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குக் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கக்ரா கிராமத்தில் பலர் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருவதை அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று, தங்கள் செலவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது. இதையடுத்து தந்தை  ராம்லால்க்கும், மகன் ஜித்தீசுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.

30 வருடங்கள் கழித்து, பேரன் மற்றும் மகன் முன்னிலையில் தந்தை திருமணம் செய்துள்ள நிகழ்வு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

MARRIAGE, FATHER, SON, RAMLAL MUNDA, GUMLA DISTRICT