'ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள்!'... 'சுங்கச்சாவடிகளில் அவலம்!'... 'போலீஸ் பாதுகாப்பு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

'ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள்!'... 'சுங்கச்சாவடிகளில் அவலம்!'... 'போலீஸ் பாதுகாப்பு'...

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் விரைவாக செல்லவும், நீண்ட நேரம் காத்திருந்து கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கவும், ஃபாஸ்டேக் என்ற எலக்ட்ரானிக் பணம் செலுத்தும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், வாகன உரிமையாளர்கள் வங்கிகளில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி, ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் பெற்று வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு, சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும் போது, அந்த வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாக பணம் செலுத்துப்பட்டுவிடும். இந்நிலையில், இன்று முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாகி உள்ளதால், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள், உரிய லேனில் நிற்காமல் செல்ல முடிந்தது. ஃபாஸ்டேக் லேனைப் பயன்படுத்தும், ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

அதே வேலையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் செல்ல பிரத்யேக லேன்கள் உள்ளன. இதனால், கட்டண செலுத்தப் பயன்படும் லேன்களில், நெடுந்தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்துக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில இடங்களில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதால், பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

TRAFFIC, VEHICLES, FASTAG