'மச்சான் நமக்குள்ள என்னடா '...'500 ரூபாயை' திருப்பி கேட்ட உயிர் நண்பன்'... அடுத்து நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு ஒருவரின் வாழ்க்கையை எந்த அளவிற்கு சிதைத்து விடுகிறது என்பதற்கு தற்போது நடந்திருக்கும் சம்பவம் பெரிய உதாரணம் ஆகும்.

'மச்சான் நமக்குள்ள என்னடா '...'500 ரூபாயை' திருப்பி கேட்ட உயிர் நண்பன்'... அடுத்து நடந்த பயங்கரம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடமலைபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் நந்தகுமார். 24 வயது இளைஞரான இவர், 100 நாள் வேலை திட்டத்தில் எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார். நந்தகுமாரின் நெருங்கிய நண்பரரான விஜய், காங்கயத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

தற்போது விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் விஜய்யின்  ஊருக்கு வந்திருந்தார். அப்போது இருவருக்கும் நண்பரான சுதாகர் என்பவரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இந்நிலையில் மலைமேடு என்ற பகுதிக்கு மது குடிக்க விஜய்யும், சுதாகரும் சென்ற நிலையில், நந்தகுமாருக்கு மதுப்பழக்கம் இல்லாததால் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்துள்ளார். அப்போது ஜாலியாக நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, நந்தகுமார் தன்னிடம் விஜய் கடனாக வாங்கிய 500 ரூபாய் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது விஜய் 'நண்பர்களுக்குள் இதெல்லாம் என்ன  டா' என ஜாலியாக கூறியுள்ளார். ஆனால் நந்தகுமாருக்கு கோபம் வர. விஜய்க்கும், நந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில்  ரூ.500 கண்டிப்பாக திருப்பி தரும்படி நந்தகுமார் கேட்டதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த விஜய் நண்பர் நந்தகுமாரை ஆவேசமாக தள்ளி விட்டார்.

இதில் நிலைதடுமாறி அங்கிருந்த பாறாங்கல்லில் நந்தகுமார் விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத நண்பர்கள் அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால் நந்தகுமார் மூச்சு பேச்சில்லாமல் கிடந்துள்ளார். இதனால் பயந்துபோன நண்பர்கள் அங்கிருந்து சிறுது தூரம் சென்று, நந்தகுமாரின் பெற்றோருக்கு போன் மூலம் நடந்தவற்றை கூறினர்.

நடந்த சம்பவங்களை கேட்டு அதிர்ந்துபோன நந்தகுமாரின் பெற்றோர், காருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த நந்தகுமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து நந்தகுமாரின் பெற்றோர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார்செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் மற்றும் சுதாகர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

500 ரூபாய்க்காக நண்பனிடம் சண்டை போட்டு, இறுதியில் ஆத்திரமும், போதையும் சேர்ந்து இளைஞர் ஒருவரின் உயிரை பலிவாங்கியது தான் மிச்சம்.

MURDER, FRIENDS, 500 RS, TIRUPUR, PALLADAM