கமல் யாருக்கு 'வாக்கு' கேட்கிறார்.. 'எங்களுக்காக'த்தான் சீமான் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மத்திய அமைச்சரவையில் நாங்கள் இடம்பெற்றால், ஏழுபேர் விடுதலையை வலியுறுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கமல் யாருக்கு 'வாக்கு' கேட்கிறார்.. 'எங்களுக்காக'த்தான் சீமான் அதிரடி!

மக்களவைத் தேர்தலில் 50 சதவிகித விழுக்காடு பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 20 பெண்களை தேர்தல் களத்தில் நிற்க வைத்துள்ளோம் என்று கூறினார். தங்கள் கட்சி மட்டுமே இவ்வாறு சம உரிமை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், 33 சதவிகித இடஒதுக்கீட்டைக் கூட மற்றக் கட்சிகள் அமல்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மட்டுமே சென்ற இந்தியர்கள் பணம், தற்போது பெரிய முதலாளிகளிடம் மட்டுமே சென்றடைகிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேளாண்மைத்துறை, தொழில்துறை இரண்டுமே சம அளவில் முன்னேறினால், மக்கள் நலமுடன் வாழமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழர்களாகிய நாங்கள் திராவிடத்தை ஆதரிக்கவில்லை. நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல், பிரச்சார வீடியோவைக் கண்ட அவர், எங்களுக்காகத் தான் கமல் வாக்கு கேட்கிறார் என்று கலகலத்தார். மேலும் கமலுக்கு அரசியல் தெளிவு இல்லை என்று கூறியுள்ளார். அவரது முழுமையான பேட்டியை இங்குக் காணலாம்...