'இ- சிகரெட்' புகைப்பவர்களுக்கு வரும் பாதிப்புகள் என்ன..? பயன்பாட்டுக்கு தடை விதித்தது மத்திய அரசு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களிலும் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் நாடு முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து யுஜிசி சார்பில், அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் ''இ-சிகரெட் தொடா்ச்சியாக பயன்படுத்துவது மூச்சு தொடா்பான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, மூளையையும் பாதிக்கும் என்று தெரிய வந்தது. இதன் காரணமாக, மத்திய அரசு இ-சிகரெட்டுக்குத் தடை விதித்துள்ளது.
எனவே, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் அவற்றின் வளாகங்களில் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும். அத்துடன் அது குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த அறிவுறுத்தலை பல்கலைக்கழகங்கள் தங்களின் இணைப்புக் கல்லூரிகளுக்கும் வழங்க வேண்டும்''.
இவ்வாறு யுஜிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.