‘அவங்க கொரோனாவையும் சேத்து கொண்டு வருவாங்க!’.. பெண் மருத்துவர்களுக்கு குடியிருப்புவாசிகளால் நேர்ந்த கொடுமை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமருத்துவர்கள் வீட்டுக்கு கொரோனாவை கொண்டுவந்துவிடுவார்கள் என்று கூறி டெல்லியில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் உலகெங்கும் மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரான முழுநேர போராட்டத்தில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பரிதாபகரமாக சில மருத்துவர்கள் இறந்துபோகவும் நேர்ந்துள்ளது. இந்த நிலையில் நடமாடும் கடவுளாகவே மருத்துவர்கள் பார்க்கப்பட்டும், வணங்கப்பட்டும் வருகின்றனர்.
ஆனால் டெல்லி கவுதம் நகர் குடியிருப்புப் பகுதி ஒன்றில், தங்கியிருக்கும் 2 பெண் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் மூலம் தமக்கும் கொரோனா தொற்று அபாயம் உண்டாகும் என்று கூறி, அவ்விரு பெண் மருத்துவர்களும் பழங்களை வாங்கிக்கொண்டு குடியிருப்புக்கு வந்தபோது, அனைவரும் அவர்களிடம் இருந்து இடைவெளிவிட்டு அவர்களை தனிமைப்படுத்த முயற்சித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த குடியிருப்புவாசிகள் தங்களைத் தாக்கியுயதாகவும் வீட்டைவிட்டு வெளியேறும்படியும் கூறியதாகவும்
"We were buying fruits when a man started to shout at us to maintain distance. He blamed us for spreading Coronavirus&hit us,"say the 2 female doctors posted at Emergency Dept of Delhi's Safdarjung Hospital,who were allegedly assaulted by their neighbour in GautamNagar last night pic.twitter.com/IT4DRfb5or
— ANI (@ANI) April 9, 2020
அப்பெண் மருத்துவர்கள் புகார் அளித்துள்ளனர். அப்படி அந்த பெண் மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்துவருகின்றனர். பெண் மருத்துவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.