இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
3. தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து ஏப்ரல்14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் நஸீமுதீன் உத்தரவிட்டுள்ளார்.
4. கொரோனா குறித்த தவறான தகவல்களுடன் கூடிய பதிவுகளை நீக்குமாறு ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. தனி நபர்களுக்கான ஐந்து லட்ச ரூபாய்க்குட்பட்ட வருமான வரி நிலுவைத் தொகை உடனடியாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
6. தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றிய 1,24,657 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு.
7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 11 அம்மா உணவகங்களில் இன்று முதல் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.
8. இந்தியா-அமெரிக்கா உறவு எப்போதும் உறுதியாக இருக்கும். கொரோனாவுக்கு எதிராக இந்தியாவால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம். நாம் ஒற்றுமையாக வெல்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
9. கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
10. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.