‘பூஜைக்கு ஸ்பெஷல் ஹெஸ்ட்டாக வந்த முதலைக்கு குங்குமம் வைத்து ஆரத்தி’.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஊர்மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத்தில் உள்ள கோவில் ஒன்றில் முதலை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பூஜைக்கு ஸ்பெஷல் ஹெஸ்ட்டாக வந்த முதலைக்கு குங்குமம் வைத்து ஆரத்தி’.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஊர்மக்கள்!

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழைமையான கோடியார் மாதா என்னும் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதி மக்கள் நேற்று அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முதலை ஒன்று கோவிலுக்குள் வந்துள்ளது.

இந்த தகவலை அறித்து சுற்றுவட்டார மக்கள் அனைவரும் உடனடியாக கோவிலுக்கு வர தொடங்கியுள்ளனர். பின்னர் முதலையின் மீது குங்குமம் தூவி, ஆரத்தி எடுத்து வழப்பட ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் முதலையை மீட்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் அப்பகுதி மக்களின் நம்பிக்கையின்படி முதலை, கோடியார் மாதாவின் வாகனம் என கருதப்படுகிறது. இதனால் முதலையை மீட்கவிடாமல் வனத்துறையினருடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சுமார் 2 மணிநேரமாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலையை அங்கிருந்து வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

CROCODILE, GUJARAT, TEMPLE