'ஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்'...'தனிமையில் இருந்த தம்பதி'...'ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஹேக்கர்கள்.

'ஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்'...'தனிமையில் இருந்த தம்பதி'...'ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்'!

முன்பெல்லாம் செல்போன், லேப்டாப் போன்றவற்றை ஹேக் செய்து அதிலிருந்த தகவல்கள் திருடப்பட்டன. ஆனால் அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்து அதன் மூலம் தம்பதியரின் பாலியல் வீடியோவை, ஆபாச இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது படுக்கையறையில் இருக்கும் ஸ்மார்ட் டிவி மூலமாக ஆபாச இணையதளங்களில் உள்ள வீடியோகளை பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ், தனது மனைவியுடன் படுக்கையறையில் தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வீடியோ பார்க்க சென்றுள்ளார். அப்போது தனது மனைவியுடன் அவர் தனிமையில் நெருக்கமாக இருந்த காட்சிகள் அந்த வலைத்தளத்தில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார். இதையடுத்து தனது மனைவியுடன் இருந்த காட்சிகள் எப்படி ஆபாச தளத்திற்கு சென்றது என்று அவரும் ஆய்வு செய்தார். அப்போது தான் அவருக்கு அந்த விபரீதம் புரிந்தது.

ராஜேஷ் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் ஆபாச வீடியோகள் பார்ப்பது வழக்கம். அப்போது ஹேர்கர்கள் டிவியின் உள்ளே நுழைந்து, காட்சிகளை படம் பிடித்து இருப்பதும் தெரியவந்தது. இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த அவர், அந்த ஆன்லைன் தளத்தில் அளித்த புகாரையடுத்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. ஸ்மார்ட் டிவியில், கேமரா இருப்பதால் நேரடியாக மற்றொரு கணினி மூலம் தம்பதியின் பாலியல் வீடியோவை ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இதை உடனடியாக ஆன்லைன் வழியாக ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதோடு ஸ்மார்ட் டிவியில் வை-பை இணைக்கப்பட்டு அது எப்போதும் உபயோகத்தில் இருப்பது ஹேக்கர்களுக்கு வசதியாக போய்விட்டது. இதனிடையே இதுகுறித்து பேசிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் '' பெரும்பாலும் இணையத்தோடு ஸ்மார்ட் டிவியை இணைத்து வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

அதோடு ஹேக்கர்கள் பெரும்பாலும் வலைவிரித்து வைத்திருப்பது ஆபாச தளங்களில் தான். எனவே ஸ்மார்ட் டிவி வழியாக இணையத்தின் மூலம் ஆபாச தளங்களில் சென்று வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதோடு தேவையில்லாத நேரத்தில் ஸ்மார்டிவியின் கேமராவை துணி கொண்டு மறைத்து வைத்திருப்பதும் நல்லது'' என்பதே வல்லுனர்களின் கருத்தாகும்.

SMART TV, SURAT COUPLE, PORN SITE, ADULT WEBSITE, HACKED, HACKER