'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்!

இந்தியாவில் 700-க்கும் அதிகமானோர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவரை 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருக்கின்றனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு, எல்லைகளை மூடுவது, மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட  பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த மாநில அரசுகளுக்கு உதவிட ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பேரிடர்கள், வெள்ளம், புயல் போன்றவற்றின் போது பொதுமக்களை மீட்கவும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசின் முப்படையும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகளை செய்வது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இந்திய ராணுவத்தை பயன்படுத்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.