தொடர்ந்து 'துரத்தும்' துயரம்... கொரோனாவுக்கு சிகிச்சையளித்த '37 மருத்துவர்கள்' மரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. கொரோனா தோன்றிய சீனாவை விட, இத்தாலி நாடு தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தொடர்ந்து 'துரத்தும்' துயரம்... கொரோனாவுக்கு சிகிச்சையளித்த '37 மருத்துவர்கள்' மரணம்!

இந்த நிலையில் இத்தாலிக்கு அடுத்த பேரிடியாக மருத்துவர்கள் அங்கு அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் இதுவரை 37 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கின்றனர். அதேபோல சுமார் 6205 ஊழியர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.

இதனால் என்ன செய்வது? என இத்தாலி அரசு திகைப்பில் ஆழ்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும், சீன மற்றும் கியூபா டாக்டர்கள் இத்தாலிக்கு உதவி செய்ய முன்வந்தும் கூட அங்கு நாளுக்குநாள் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.