24 மணி நேரத்தில் '514 பேர்' பலி... இத்தாலி, சீனாவுக்கு அடுத்து... 'மோசமான' நிலையில் சிக்கிய நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலி, சீனாவுக்கு அடுத்து அதிகமான உயிரிழப்புகளை ஸ்பெயின் நாடு சந்திக்க ஆரம்பித்து இருக்கிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் இத்தாலி நாடு அதிகமான உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனாவால் உயிரிழந்து இருக்கின்றனர். இதேபோல சீனாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில் இத்தாலி, சீனாவை அடுத்து ஸ்பெயின் நாடு தற்போது கொரோனாவால் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கு ஒரே நாளில் சுமார் 514 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையும் ஒரே நாளில் 6,600 அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இதையடுத்து அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், நெருக்கடி நிலையை மேலும் 2 வாரங்களுக்கு ஏப்ரல் 11-ந் தேதி வரை நீட்டிக்க நாடாளுமன்ற ஒப்புதலை எதிர்நோக்கி உள்ளார்.