'போலீஸே நிறுத்துறுதில்ல.. நீ என் காரை மடக்குறியா?’.. சுங்க ஊழியருக்கு நேர்ந்த கொடுமை.. பதறவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇப்போது அடிக்கும் வெயிலுக்கு டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகளில் இருக்கும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு நிற்பதென்பது சற்று சிரமமான காரியம்தான். அங்கு ஒரு விநாடி நின்று பில் கட்டிவிட்டு செல்லும் வாகன ஓட்டிக்கே இப்படி என்றால், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நிலை இன்னும் மோசம்.
இத்தகைய பருவச் சூழலை சமாளித்து பணிபுரிந்துகொண்டு வருவதற்கிடையில் மேற்கொண்டு தாறுமாறாகவும் முரண்பாடாகவும் வரும் கார் ஓட்டிகளையும் சமாளிக்கவேண்டும் என்றால் அசவுகரியம்தான். ஆனால் டெல்லியின் குர்கான் டோல்கேட்டில் நடந்துள்ள சம்பவம், சுங்கச்சாவடி ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இத்தனை நெருக்கடியில் ஊழியர் ஒருவர் சுங்கச்சாவடியில் பணிபுரிந்து கொண்டிருந்துள்ளார். அவரிடத்தில் இன்னோவா காரை ஓட்டுக்கொண்டு வாகன ஓட்டி ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த காரை சுங்க ஊழியர் நிறுத்தியதால் டென்ஷனான அந்த வாகன ஓட்டி, ‘போலீஸா என் காரை நிறுத்துறதுல்ல, நீ நிறுத்துறியா?’ என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கோபத்தில் அந்த சுங்க ஊழியரை அடித்து தூக்கியுள்ளார். அப்போது காரின் முன்பகுதியில் உள்ள போன்னட்டில் மாட்டிக்கொண்ட சுங்க ஊழியரை இறக்கிவிடாமல் காரை இயக்கிக்கொண்டே 5-6 கிலோ மீட்டர் வரை 100 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் பதற்றமான அந்த ஊழியர் நிலைகுலைந்து போயுள்ளார். பின்னர் ஹரியானாவுக்கு அருகில் உள்ள ஆளில்லா இடத்திற்கு அருகே சுங்க ஊழியர் அஷோக் குமார் இறக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு வகையிலான பயமுறுத்தும் வகையிலும், கடத்தும் நோக்கிலும் உள்ளதாக தங்கள் பணிக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அஷோக் குமார் குற்றம் சாட்டியதை அடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அந்த காருக்குள் இருந்த 2 நபர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
#WATCH Haryana: A car driver dragged a toll plaza employee on his car's bonnet in Gurugram when asked to stop at toll plaza.Victim says,"Car driver dragged me for 5-6km on his car's bonnet on a speed of about 100 km/hr. He said,'You'll stop my car?Even police doesn't stop my car' pic.twitter.com/Wz9kMOs8uu
— ANI (@ANI) April 13, 2019