'தவறுதலாக பாஜக பட்டனை அழுத்தி ஓட்டு’.. ரோஷத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்த வாக்காளர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாஜகவுக்கு தவறிப்போய் ஓட்டு போட்டதால், தன்னுடைய விரலை தானே வெட்டிக்கொண்ட தலித் ஆதரவு வாக்காளர் ஒருவரின் செயல் உத்தரபிரதேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் புலான்ட்ஷார் நாடாளுமன்றத் தொகுதியில் நிகழ்ந்த 2-ம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலில், வாக்குப்பதிவின்போது இளைஞர் ஒருவர் பிஎஸ்பிக்கு பதிலாக தவறிப்போய், ஈவிஎம் மெஷினில் இருந்த பிஜேபி பட்டனை அழுத்திவிட்டார்.
ஷிகாபூருக்குட்பட்ட அப்துல்லாபூர் ஹூல்சான் கிராமத்தில் வசிக்கும் 25 வயதேயான பவன்குமார் என்கிற இளைஞர், SP-BSP-RLD தலித் ஆதரவுக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் யோகேஷ் வர்மாவுக்கு வாக்களிக்கும் நோக்கில் வாக்குச் சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால் தவறுதலாக நடப்பு எம்.பியும் பாஜக வேட்பாளருமான போலோ சிங்குக்கு ஓட்டினை தட்டிவிட்டார்.
தவறுதலாக பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதால், தான் தவறு செய்துவிட்டதாகவும், அதற்காக தான் வருந்துவதாகவும் அதை சரிசெய்யும் வகையில், அதற்கு பிராயிச்சித்தம் தேடும் நோக்கிலும் ஈவிஎம் மெஷினில் பாஜகவின் பட்டனை அழுதிய விரல் எந்த விரலோ அந்த விரலை வெட்டிக்கொண்டுவிட்டார் . இதுபற்றி அவர் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Watch: Shocker coming in from Bulandshahr, as a BSP supporter chopped off his finger after he allegedly pressed the wrong button on the EVM and voted for BJP instead. #LokSabhaElections2019 pic.twitter.com/1YqYIr2QWq
— Mohit Sharma (@iMohit_Sharma) April 18, 2019