'அவர் தான் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்'...அவர் 'டீம்ல இருக்குறது என்னோட அதிர்ஷ்டம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பைக்காக 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், தோனி உள்ளிட்ட மூத்த வீரர்களுடன்,விஜய் சங்கர் உள்ளிட்ட புதிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய கோலி,தோனி எந்த அளவிற்கு அணிக்கு முக்கியம் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து பேசியுள்ள கோலி ''தோனி போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்கக் கூடியவர். முதல் பந்தில் இருந்து 300வது பந்து வரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர். ஸ்டம்பிற்கு பின்னால் தோனி இருந்தால் நிச்சயம் எனக்கு அதிர்ஷ்டம் தான்.
ஒவ்வொரு போட்டி முடிந்ததும் அன்றைய போட்டியில் செய்யப்பட்ட தவறுகள் குறித்து தோனியுடன் கலந்து அலோசனை செய்வேன்.நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் போது தோனி எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தார். பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.நான் இந்திய அணியில் விளையாட தொடங்கிய போது,சில போட்டிகளில் வேறு சிலரை மாற்றி கொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருந்தது.இருப்பினும் என்னுடைய திறனை நன்றாக பயன்படுத்தி கொண்டேன்.
மேலும் பல இளைஞர்கள் விளையாட ஆசைப் பட்ட 'மூன்றாவது இடத்தில்' விளையாட தோனி எனக்கு வாய்ப்பு அளித்தார்.அது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.