நாட்டிலேயே 'சம்பளத்தை' அதிகமா அள்ளிக்கொடுக்குற 'சிட்டி' இதுதான்... எவ்ளோ தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் உள்ள நகரங்களில் தனிநபருக்கு அதிக சம்பளம் வழங்கும் நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே 'சம்பளத்தை' அதிகமா அள்ளிக்கொடுக்குற 'சிட்டி' இதுதான்... எவ்ளோ தெரியுமா?

ராண்ட்ஸ்டட் இன்சைட்ஸ் ஊதிய ட்ரெண்ட்ஸ் என்னும் அறிக்கை சமீபத்தில் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டது. அதில் தனிநபருக்கு அதிக சம்பளம் வழங்கும் இந்திய நகரமாக பெங்களூர் திகழ்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் ஹைதராபாத், மும்பை நகரங்கள் உள்ளன.

பெங்களூரில் ஜூனியர் ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 5.27 லட்சமாகவும், நடுத்தர ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 16.45 லட்சமாகவும் சீனியர் லெவல் ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 35.45 லட்ச ரூபாயாகவும் உள்ளது.

ஹைதராபாத், மும்பை நகரங்களில் ஜூனியர் லெவல் ஊழியர்களின் சம்பளம் 5 மற்றும் 4.59 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த பட்டியலில் பெங்களூர் நகரம் தொடர்ந்து 3-வது வருடமாக இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு ஐடி நிறுவனங்கள் முக்கிய காரணமாக திகழ்கின்றன.

செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமோஷன், ஜிஎஸ்டி வல்லுநர்கள், கணக்காளர்கள், கன்சல்டண்ட் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு அதிக சம்பளத்தை நிறுவனங்கள் வழங்குவதாக கூறப்படுகிறது.