'பொள்ளாச்சி' விவகாரத்தால்... வட மாநிலங்களை பின்னுக்குத்தள்ளிய... 'தமிழக' நகரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்திய நகரங்கள் குறித்த பட்டியலை டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வன்முறை, பாலியல் வன்கொடுமை, மோசடி, கொலை மற்றும் கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியாகி இருக்கும் இந்த பட்டியலில் தமிழகத்தின் கோயமுத்தூர் முக்கிய இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொள்ளாச்சி விவகாரம் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக கோயம்புத்தூர் இந்த பட்டியலில் இடம்பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல தென்னக நகரங்களில் பெங்களூர் எல்லா விதமான குற்றங்கள் பட்டியலிலும் முதல் 5 இடங்களுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
சிறுமிகளை கடத்துவது, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் போன்றவை இந்த பட்டியலின் கீழ் வருகின்றன. இதில் இந்தூர் 14.1 சதவீதத்துடன் (மத்திய பிரதேசம்) முதல் இடத்தையும், டெல்லி 11 சதவீதத்துடன் 2-வது இடத்தையும் சென்னை 0.3 சதவீதத்துடன் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை, மிரட்டுதல் ஆகியவை இதன்கீழ் வருகின்றன. இதில் டெல்லி 2.1 சதவீதத்துடன் முதல் இடத்தையும், பெங்களூர் 2 சதவீதத்துடன் 2-வது இடத்தையும் சென்னை 0.4 சதவீதத்துடன் 12-வது இடத்தையும் பிடித்துள்ளது.
கொலை மற்றும் கொலை முயற்சிகள்
பாதுகாப்பு இல்லாத நகரங்கள் பட்டியலில் 50 சதவீதத்துடன் பாட்னா முதல் இடத்தையும், பெங்களூர் 6.8 சதவீதத்துடன் 4-வது இடத்தையும், டெல்லி 5.2 சதவீதத்துடன் 8-வது இடத்தையும் 1.4 சதவீதத்துடன் கோயம்புத்தூர் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.