வந்தது ஆர்டர் பண்ண ‘ஐஃபோன்’ தான்... ஆனா கடைசியில் காத்திருந்த ‘வேற லெவல்’ ட்விஸ்ட்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தளத்தில் ஐஃபோன் ஆர்டர் செய்தவர் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வந்தது ஆர்டர் பண்ண ‘ஐஃபோன்’ தான்... ஆனா கடைசியில் காத்திருந்த ‘வேற லெவல்’ ட்விஸ்ட்..

பெங்களூரைச் சேர்ந்த ரஜனிகாந்த் என்பவர் புதிய ஐஃபோன் 11 ப்ரோ வாங்க முடிவு செய்து பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தளத்தில் அதற்காக ஆர்டர் செய்துள்ளார். ஃபோனிற்கான முழுத்தொகை ரூ 94 ஆயிரத்தை முன்னரே செலுத்திய அவருக்கு ஐஃபோன் ஒன்றும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆசையுடன் வாங்கிய ஐஃபோனை மகிழ்ச்சியாக அவர் இயக்க முற்பட்டபோதுதான் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

டெலிவரி செய்யப்பட்ட ஐஃபோன் பார்ப்பதற்கு ஒரிஜினல் போலவே இருந்தபோதும், ஆன் செய்ததும் அதில் ஆண்ட்ராய்டு செயலிகள் இயங்கியுள்ளன. அதைப்பார்த்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்திற்கு இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்நிறுவனமும் அவருக்கு புதிய ஐஃபோன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

MONEY, IPHONE, ONLINE, FLIPKART, ORDER, CHEATING