'அடுத்த' 24 மணிநேரத்தில்... 6 மாவட்டங்களில் 'கனமழை'க்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

'அடுத்த' 24 மணிநேரத்தில்... 6 மாவட்டங்களில் 'கனமழை'க்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

RAIN, CHENNAI, ALERT