கொஞ்ச நாள் யாரும்.. 'வேலைக்கு' வர வேணாம்..அடுத்தடுத்து அறிவித்த 'பிரபல' நிறுவனங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மிகப்பெரிய நிறுவனங்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.அந்த வகையில் சென்னை எண்ணூரில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.இதனால் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது.

கொஞ்ச நாள் யாரும்.. 'வேலைக்கு' வர வேணாம்..அடுத்தடுத்து அறிவித்த 'பிரபல' நிறுவனங்கள்!

இந்த நிலையில் மீண்டும் இந்த மாதத்தில்(அக்டோபர்) 2 முதல் 15 நாட்களை, வேலையில்லா நாட்களாக அசோக் லேலண்ட் அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆலைகளுக்கும் பொருந்தும். இதனால் அசோக் லேலண்ட் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல பிரபல ஜெர்மன் ஆட்டோ நிறுவனமான போஷ் இந்த காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) ஒரு மாதத்திற்கு 10 நாட்கள் தனது உற்பத்தியை  போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அந்த கம்பெனியின் நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளார். போஷ் நிறுவனத்திற்கு இந்தியாவில் 18 உற்பத்தி நிறுவனங்களும், 7 வளர்ச்சி ஆலைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ASHOKLEYLAND, BOSCH