'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 2017-ஆம் ஆண்டு மாட்டிறைச்சி குறித்த சர்ச்சைப் பதிவினை பேஸ்புக்கில் எழுதியதற்காக, பேராசிரியர் மீது தற்போது ஜார்க்கண்ட் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR!

மாட்டிறைச்சி உண்பது தங்கள் ஜனநாயக மற்றும் கலாச்சார உரிமை என்றும், மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என தங்கள் மீது மதச் சாத்திரங்களை திணிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றும் இந்தியாவின் பெரும்பான்மை மதத்தை குறிப்பிட்டு ஜார்க்கண்ட் பழங்குடி இன பேராசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான ஜீத்ராய் ஹன்ஸ்டா தனது பேஸ்புக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து, மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் வெவ்வேறு சமூகத்தினரிடையே பகையுண்டாக்கும் நோக்கில் பதிவிடுதல் உள்ள குற்றங்கள் சுமத்தி, ஜீத்ராய் மீது கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி ஜார்க்கண்ட் உறுப்பினர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சட்டப்பிரிவு 153(A), 295A, 505ன் கீழ், பேராசிரியர் ஜீத்ராய் ஹன்ஸ்டா மீது ஜார்க்கண்ட் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பதாக ஜீத்ராயின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளதாக வட இந்திய மற்றும் தேசிய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்ட் பழங்குடியினரின் உரிமை இயக்கமான மஜி பர்கன மஹால் என்கிற இயக்கம், பேராசிரியர் ஜீத்ராய் மீதான இந்த எப்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர் வேலைபார்த்துவந்த கொல்ஹான் பல்கலைக்கழகத்துக்கு இந்த விவகாரத்தில் ஜீத்ராயின் பக்கமுள்ள நியாயத்தை பற்றிய விளக்கக் கடிதம் கொடுக்கப்பட்டும் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

JHARKHAND, PROFESSOR, BEEFCONTROVERSY, FIR, POLICE