'OLXல ஏசி பாத்தேன்.. வாட்ஸாப்ல QR CODE-அ ஸ்கேன் பண்ணி அனுப்புங்க'.. 'மர்ம நபரிடம்' ஏமார்ந்த நடிகர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலிவுட் மற்றும் டெலிவிஷன் நடிகர் மோஹக் குராணா என்பவர் தனது பழைய ஏசியை OLX மூலம் விற்கலாம் என நினைத்து, அதை புகைப்படம் எடுத்து அந்த செயலியில் பதிவிட்டு, கூடவே அதன் வில 11, 500 ரூபாய் என்றும் பதிவிட்டிருந்தார்.

'OLXல ஏசி பாத்தேன்.. வாட்ஸாப்ல QR CODE-அ ஸ்கேன் பண்ணி அனுப்புங்க'.. 'மர்ம நபரிடம்' ஏமார்ந்த நடிகர்!

இதைப் பார்த்த மர்ம நபர் ஒருவர் அந்த விளம்பரத்தின் கீழ் இருந்த குராணாவின் போன் நம்பரை வைத்து, இரவு 2 மணிக்கு போன் செய்துள்ளார். அப்போது குராணிடம் வங்கி விபரங்களை பெற்றுக்கொண்ட அந்த நபர், ஒரு QR Code அனுப்புவதாகவும், அதை ஸ்கேன் செய்தால், பணம் அனுப்புவதாகவும், பின்னர் ஏசியை பெற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அந்த நபர் அனுப்பிய QR Code-ஐ குராணா ஸ்கேன் செய்ததுதான் தாமதம், குராணாவின் கணக்கில் இருந்து முதலில் 11, 500 ரூபாயும், சுதாரிப்பதற்குள் அடுத்து 23,000 ரூபாயும் குறைந்தது. அந்த மர்ம நபருக்கு போன் செய்தால், நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது.

அந்த மர்ம நபர்தான் தன் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்திருக்க வேண்டும் என்று உணர்ந்த குராணா, இது குறித்து போலீஸாரிடத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மர்ம நபர் மீது சைபர் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ROBBERY