'அவரே' போட்டுருந்தா கூட ... 'இப்டி' பண்ணிருக்க மாட்டாரு... முன்னாள் சிஎஸ்கே வீரரை 'பங்கமாக' கலாய்க்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை உலகப்புகழ் பெற்ற விஸ்டன் கிரிக்கெட் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி சார்பில் கோலி, பும்ரா இருவரும் இடம்பிடித்து உள்ளனர். ஆனால் கோலிக்கு அதில் கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. 3-வது வீரராக இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அணியை ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் கேப்டனாக வழிநடத்துவார் என்றும், காலின் முன்ரோ-ஆரோன் பிஞ்ச் இருவரும் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 4-வது மற்றும் 5-வது இடங்களில் ஷேன் வாட்சன், மேக்ஸ்வெல் இடம்பெற்று உள்ளனர்.
விக்கெட் கீப்பராக இங்கிலாந்து நாட்டின் ஜாஸ் பட்லர் இடம்பிடித்து இருக்கிறார். அதற்கடுத்த இடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் நபி, இங்கிலாந்து நாட்டின் டேவிட் வில்லே (முன்னாள் சிஎஸ்கே வீரர்) ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.
Even if David Willey made this list, he wouldn't put his name on it..
— Abhijith Mukund (@abhimukund7) December 30, 2019
வேகப்பந்து வீச்சை பும்ரா, மலிங்கா இருவரும் கவனித்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. சுழற்பந்து ஸ்பெஷலிஸ்ட் ரஷித் கானும் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார். ஆனால் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை.
இந்தநிலையில் டேவிட் வில்லே பெயர் இந்த பட்டியலில் இடம்பெற்று இருப்பதை பார்த்த ரசிகர்கள், அவரே இந்த பட்டியலை தயாரித்து இருந்தால் கூட அவரது பெயரை எழுதியிருக்க மாட்டார் என்று கலாய்த்து வருகின்றனர். இதனால் "David Willey" தற்போது இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார்.